×

மகளிர் உலக கோப்பை டி20: இறுதிப்போட்டியில் இன்று ஆஸி-இங்கி. மோதல்

லண்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பைனலில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் இன்று சாம்பியன் யார் என்பதற்கான பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 12 அணிகள் இரு பிரிவுகளாக மோதின. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் பிரிவில் 3வது இடம் பிடித்த இந்திய அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசையும், இங்கிலாந்து 40 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவையும் வீழ்த்தின. இந்த நிலையில், பரபரப்பான இறுதிப் போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.

Tags : Women's World Cup T20 ,Aussie ,England ,London ,Australia ,ICC Women's World Cup T20 ,England.… ,
× RELATED மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி:...