×

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

 

பண்ருட்டி, ஜூன் 26: காடாம்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் (பொறுப்பு), உதவி ஆய்வாளர் திவாஸ் மற்றும் போலீசார் நேற்று செம்மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாரியம்மன் கோலில் தெருவில் உள்ள கலியபெருமாள் என்பவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தி, கடை உரிமையாளர் கலியபெருமாளை கைது செய்தனர். அவரிடமிருந்து ஏராளமான புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Panruti ,Nandakumar ,Kadambuliyur Police Station ,Semmedu ,Kaliyaperumal ,Mariamman Kolil Street… ,
× RELATED 5 பேரிடம் ரூ.1.48 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை