×

25ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் ச.கவிதா தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவு துறை, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பேரூராட்சி, நகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Farmers' Grievance Redressal Day ,Thiruvallur ,Thiruvallur District Collector ,Collector ,S. Kavitha ,Agriculture Department ,Horticulture Department ,Agricultural Sales… ,
× RELATED கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி...