சென்னை: சைதாப்பேட்டை குமரன் காலனி, கோதமேடு பகுதிகளில் 6 மணி நேரமாக நீடித்த மின்வெட்டைக் கண்டித்து, குழந்தைகளுடன் மின் அலுவலகத்தை சூழ்ந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் வாழும் குடியிருப்பில் மட்டும் மின்சாரம் இருக்கிறது. ஆனால், எங்கள் பகுதியில் இல்லை, அவர்களுக்கு ஒரு நியாயம்; எங்களுக்கு ஒரு நியாயமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
