சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாது என நீர்வளத்துறை அறிவித்துள்ளது. நீர்பிடிப்புப் பகுதியில் போதிய மழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 424 கன அடியாகவும் நீர்மட்டம் 79 அடியாகவும் உள்ளதால் நாளை திறப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
