×

நேபாளத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் பலி

காத்மாண்டு: நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில், மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 700 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தவாங் கிராமப்புற நகராட்சியின் ஜல்ஜலா பகுதியில், மழை பெய்துகொண்டிருந்த சூழலில், சேறும் சகதியுமான ஒரு சாலையில் வாகனம் சறுக்கி, மலையிலிருந்து கீழே விழுந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர்கள் கூறினர். ஜல்ஜலா பகுதியில் இன்று நடைபெறவுள்ள ‘பைசாக் பூர்ணிமா’ விழாவில் கலந்துகொள்வதற்காகப் பயணம் செய்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

Tags : Nepal ,Kathmandu ,Rolpa district ,Jaljala ,Tawang Rural Municipality ,
× RELATED 226க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: மம்தா நம்பிக்கை