×

இந்த மாதம் 6 நாள் பிரதமர் மோடி 4 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்

புதுடெல்லி: பிரதமர் மோடி இந்த மாதம் 4 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மே 15 முதல் 20 வரை நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அவர் செல்ல உள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி தனது ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நார்வேயில்5 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மூன்றாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார்.

Tags : Modi ,New Delhi ,Netherlands ,Sweden ,Norway ,Italy ,Union government ,
× RELATED பெங்களூரு அரசு மருத்துவமனை...