×

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று; துணை முதலமைச்சர் புகழாரம்!

 

சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசனின் 136-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே! தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும்! இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; தமிழர்களின் சுயமரியாதை உணர்வை தமது தீப்பொறி வரிகளால் தட்டி எழுப்பிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று! இனப்பகைவர்களின் சூழ்ச்சிகளை கூரிய வரிகளால் தோலுரித்து, தமிழினத்தை எழுச்சிக் கொள்ள செய்த பாவேந்தரின் பாடல்கள் – ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

 

Tags : Bharatithasan ,Chennai ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Bhavendra Bharatithasan ,Bhavandar Bharatithasan ,Chief Minister of Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி....