×

எந்த கட்சியில் சேர வேண்டும் என்பது தனிநபர் விருப்பம் பாஜவில் இணைந்த 7 ஆம் ஆத்மி எம்பிக்களுக்கு அண்ணா ஹசாரே ஆதரவு

மும்பை: ஆம் ஆத்மி கட்சி சரியான ‘‘பாதையைப் பின்பற்றியிருந்தால், ராகவ் சதா மற்றும் ஆறு மாநிலங்களவை எம்பிக்கள் கட்சியை விட்டு விலகியிருக்க மாட்டார்கள் என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறினார். ஆம் ஆத்மியை சேர்ந்த 7 எம்பிக்கள் பாஜவில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பிரபல சமூக சேவகரும் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தலைவருமான அண்ணா ஹசாரே நேற்று கருத்து தெரிவிக்கையில், ஜனநாயகத்தில் கருத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அவர்கள் (ராகவ் சதா மற்றும் எம்பிக்கள்) சில சிக்கல்களைச் சந்தித்திருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் கட்சியை விட்டு விலகினார்கள். இது அவர்களின் கட்சி (ஆம் ஆத்மி) தலைமையின் தவறு.அந்தக் கட்சி சரியான பாதையைப் பின்பற்றியிருந்தால், அவர்கள் கட்சியை விட்டு வெளியேறியிருக்க மாட்டார்கள். ஜனநாயகத்தில், எங்கு இருக்க வேண்டும், எங்கு விலக வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு என்றார்.

Tags : Anna Hazare ,Atmi MPs ,Bajaj ,Mumbai ,Yes Atmi Party ,Raghav Sada ,MPC ,Atmi ,
× RELATED இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு