- இந்தியன்
- மேற்கு வங்கம்
- அசாம்
- முதல் அமைச்சர்
- கொல்கத்தா
- அசாம் முதல்வர்
- மேற்கு வங்க சட்டமன்றம்
- ஹிமந்த பிஸ்வா சர்மா…
கொல்கத்தா: வங்கதேச ஊடுருவல்காரர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் மக்கள்தொகை மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்றும் மேற்கு வங்க தேர்தலில் ஒவ்வொரு இந்தியருக்கும் பங்கு உண்டு என்று அசாம் முதல்வர் கூறினார்.
மேற்கு வங்க சட்ட பேரவை தேர்தலையொட்டி அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று கொல்கத்தா வந்தார். அப்போது அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது: அசாம் பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 126 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜ வெல்லும். மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் நடந்த 152 இடங்களில் 110 இடங்களை பாஜ கைப்பற்றும். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் ஒரு வழக்கமான மாநிலத் தேர்தல் அல்ல.
அது ஒட்டுமொத்த தேசத்திற்கும், குறிப்பாக அதன் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் நாகரிக ரீதியான தாக்கங்களைக் கொண்ட ஒரு போட்டியாகும். இந்தத் தேர்தலில் ஒவ்வொரு இந்தியருக்கும் பங்கு உண்டு. ஊடுருவலின் தாக்கம் மேற்கு வங்கம் மற்றும் அசாமுடன் நின்றுவிடவில்லை. அது ஜார்க்கண்ட், பீகார் மற்றும் பிற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வராவிட்டால், கட்டுப்படுத்தப்படாத ஊடுருவலின் காரணமாக அந்த மாநிலம் வங்காளதேசத்தின் நீட்சியாக மாறும். ஒருமுறை மாறிவிட்ட மக்கள்தொகை அமைப்பை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது. இவ்வாறு கூறினார்.
