×

பைக் மோதி முதியவர் பலி

திருப்பூர்,ஏப்.19: திருப்பூர் ஊத்துக்குளி அடுத்த பல்லவராயன் பாளையத்தை சேர்ந்தவர் நாகப்பன் (65). கூலித்தொழிலாளி. கடந்த 15ம் தேதி மேட்டுக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் நாகப்பன் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் நாகப்பன் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  அந்த சிகிச்சை பெற்று வந்த நாகப்பன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Tags : Tiruppur ,Nagappan ,Pallavarayan Palayam ,Uthukuli, Tiruppur ,Mettukada ,
× RELATED கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம்