×

காங்கயம் தொகுதியில் வாக்குப்பதிவு செய்யும் இயந்திரம் எடுத்து செல்லும் பெட்டி தயாரிப்பு

காங்கயம், ஏப்.16: காங்கயம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் வைத்து எடுத்து செல்லும் பெட்டி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் மக்கள் 100 சதவீதம் வாக்களிக்கவேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்தி வருகிறது. காங்கயம் தொகுதியில் 318 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வாக்காளர்கள் செலுத்த உள்ள வாக்கு இயந்திரங்களை அந்தந்த மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்து செல்லவேண்டும். ஒரு வாக்குச்சாவடிக்கு தேவையான இயந்திரம், மை உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல ஏதுவாக பெட்டிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது. இதில் தொகுதியில் உள்ள பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக காங்கயம் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

 

Tags : Kangayam ,Tamil Nadu ,
× RELATED கான்கிரீட் கால்வாயாக மாறும் அமராவதி...