×

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மெகந்தி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்

திருப்பூர், ஏப்.17: சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவிகள் கையில் மெகந்தி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் (தனி), காங்கேயம், அவிநாசி (தனி), திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று திருப்பூர், திருமுருகன்பூண்டி ரிங்ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது போன்றவற்றை வலியுறுத்தி தங்கள் கைகளில் மெகந்தி மூலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல பல்வேறு கல்லூரிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags : Magandy ,Tiruppur ,Meghandi ,Tamil Nadu Assembly ,Dharapuram ,Kangeyam ,Avinasi ,
× RELATED நொச்சிபாளையம் அருகே பறக்கும் படை...