×

மாவட்டத்தில் 4 நாள் மதுக்கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி, ஏப்.19: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 4 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் 21ம் தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி இரவு 12 மணி வரை மூடப்படுகிறது. மேலும, வாக்குப்பதிவு நாளான மே மாதம் 4ம் தேதி ஒருநாள் முழுவதும் மதுக்கடைகள் மூடப்படுகிறது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, மதுபானங்களை கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Krishnagiri ,Dinesh Kumar ,Tamil Nadu assembly elections ,Krishnagiri… ,
× RELATED கருங்கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்