×

டூவீலரிலிருந்து விழுந்து வாலிபர் பலி

கிருஷ்ணகிரி, ஏப்.19: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சாமந்தகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ்(25). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், கெலமங்கலத்தில் இருந்து ஓசூர் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சி.தம்மண்டரப்பள்ளி பகுதியில் சென்ற போது, திடீரென நிலைதடுமாறி டூவீலரில் இருந்து கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த ஹரீஷை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags : Krishnagiri ,Harish ,Samantakottai ,Kelamangalam ,Krishnagiri district ,Hosur ,C. Dhammandarappally ,
× RELATED மாவட்டத்தில் 4 நாள் மதுக்கடைகள் மூடல்