- லாரி
- கிருஷ்ணகிரி
- நரேந்திரன்
- பாலேபள்ளி
- காஞ்சிகுப்பம், கிருஷ்ணகிரி மாவட்டம்
- திரிஷா
- கீழமங்களம்
- கிருஷ்ணகிரி-குபம் சாலை
கிருஷ்ணகிரி, ஏப்.17: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அருகே பாலேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன். இவரது மகள் திரிஷா(21). இவர் கெலமங்கலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, கிருஷ்ணகிரி -குப்பம் சாலையில் டூவீலரில் சென்றபோது, எம்டிவி நகர் என்ற இடத்தில், அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திரிஷா, படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மகாராஜ கடை போலீசார், அவரது உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
