×

ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரானுக்கு இந்தியா கண்டனம்!

ஈரானுக்கு கண்டனம் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இந்தியக் கப்பல்களை தாக்கியதைக் கண்டித்து டெல்லியில் உள்ள ஈரான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. Sanmar Herald எண்ணெய் கப்பல், Jag Arnav சரக்குக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது குறித்து ஈரான் தூதரை நேரில் அழைத்து முறையான கண்டனத்தை பதிவு இந்தியா செய்து விளக்கம் கேட்டது.

ஹார்முஸ் ஜலசந்தை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியக் கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது ஈரான் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20 லட்சம் பேரல் ஈராக் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு ஓமன் வளைகுடாவின் வடக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இந்தியக் கப்பலை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக இந்தியாவின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதற்காக, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) டெல்லியில் உள்ள ஈரான் தூதர் டாக்டர் முகமது ஃபதாலியை இன்று நேரில் அழைத்து தனது எதிர்ப்பை முறைப்படி தெரிவித்தது.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னதாகவே, ஹார்முஸ் ஜலசந்தை வழியாகப் பயணிக்க முயன்ற ‘ஜக் அர்னவ்’ (Jag Arnav) மற்றும் ‘சன்மார் ஹெரால்ட்’ (Sunmar Herald) ஆகிய இரு இந்தியக் கப்பல்களும் ஈரானியப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டன.

தற்போதைய நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்கள் எதுவும் இல்லை என்றாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஓமன் வளைகுடாவில் இந்தியாவின் இரண்டு டிஸ்ட்ராயர் ரகக் கப்பல்கள், ஒரு போர்க்கப்பல் மற்றும் ஒரு டேங்கர் கப்பல் ஆகியவை இந்தியக் கடற்படையால் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஷ் கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற வணிகக் கப்பல்களை ஈரானிய துப்பாக்கிப் படகுகள் தாக்கியதை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது சர்வதேச கடல்வழி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்திய அரசு நிலைமையை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

Tags : Strait of Hormuz ,India ,Iran ,Foreign Ministry ,Samman ,Delhi ,Sanmar Herald ,
× RELATED டெல்லியில் இருந்து ஆளத்துடிக்கும்...