×

மகளிர் இடஒதுக்கீடு தனிநபர் மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் நோட்டீஸ்!!

டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க இன்றைய அலுவல்களை ஒத்திவைக்கக் கோரி திமுக எம்.பி. வில்சன் நோட்டீஸ் வழங்கியுள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்த நிலையில், 2023ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு வெறும் ஏட்டளவில் மட்டும் இருக்கக்கூடாது எனக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை செய்யாமல் தற்போதைய நிலையிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வலியுறுத்தியுள்ளார். அலுவல்களை ஒத்திவைத்து மகளிர் இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கக் கோரி திமுக எம்.பி., வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் நேற்று தோல்வியடைந்த நிலையில் இடஒதுக்கீடு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மல்லிகார்ஜுன் கார்கே அலுவலகத்தில் எதிர்க்கட்சி அவைத் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களின் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். 2029 நாடாளுமன்றத் தேர்தலிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றங்களிலும் மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தக்கோரி திமுக சார்பில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த தேர்தல் முதலே மகளிருக்கு இடஒதுக்கீடு தரும் அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றவேண்டும். மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவை நடைமுறை விதி எண் 267ன் கீழ் மாநிலங்களவை தலைவருக்கு அறிவிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,Wilson ,Rajya Sabha ,Delhi ,
× RELATED மகளிர் இடஒதுக்கீடு தனிநபர் மசோதாவை...