×

சிபிஎஸ்இ.,பத்தாம் வகுப்பு தேர்வு விஜயமங்கலம் பாரதி பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

பெருந்துறை, ஏப். 17: சிபிஎஸ்இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம், பாரதி இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய, 57 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவன் சூரியராகவ், 500க்கு 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், கிருத்திக்ராஜ், 475 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், சங்கரி, 471 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில், சூரியராகவ், சங்கரி, கோகுல், ஜீவித்ரா மற்றும் அனுஹாசினி ஆகியோர், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்வு எழுதிய, 15 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 35 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், கற்பித்த ஆசிரியர்களையும், ஊக்கமளித்த பெற்றோர்களையும் பள்ளித்தலைவர் செந்தில்குமார், முதல்வர் ரீனா உமாசங்கர் ஆகியோர் விருதுகளை வழங்கி கெளரவித்தனர்.இந்த ஆண்டு தேர்வு முடிவுகள், பள்ளியின் கல்வி தரத்தையும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் மீண்டும் நிரூபித்துள்ளதாக, பள்ளித் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.

 

Tags : CBSE ,Vijayamangalam Bharathi School ,Perundurai ,Vijayamangalam ,Bharathi International School ,Suriya Raghav ,
× RELATED நொச்சிபாளையம் அருகே பறக்கும் படை...