×

பெண்ணிடம் 7 பவுன் நகை பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை

திருப்பூர், ஏப்.16: திருப்பூர் வெடத்தலாங்காடு 2-வது வீதியை சேர்ந்தவர் கவிதா (40). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி வீதியில் நடந்து சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பைக்கில் வந்த 17 வயது சிறுவன் பறித்துக்கொண்டு தப்பினான். இது குறித்து மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை பிடித்தனர். விசாரணையில் சிறுவன் குடிமங்கலம் பகுதியில் இருந்து பைக் திருடி வந்து நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.  சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட இளம்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்றது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுவனுக்கு 3 மாதம் பல்லடம் அரசு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பணி செய்ய வேண்டும் என முதன்மை நடுவர் செந்தில்ராஜா, சட்ட உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா ஆகியோர் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஹேமா மகேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.

 

Tags : Tiruppur ,Kavitha ,Vedathalangadu 2nd Street, Tiruppur ,
× RELATED கான்கிரீட் கால்வாயாக மாறும் அமராவதி...