×

ரிஷபம்

9.4.2026 முதல் 15.4.2026 வரை

சாதகங்கள்: இரண்டாம் இடத்தில் குரு இருப்பதால் நல்ல வருமானம், குடும்ப ஆதரவு மற்றும் மதிப்பு கிடைக்கும். குடும்ப ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும். பதினொன்றாம் இடத்தில் சனி மற்றும் புதன் இணைவு திட்டமிட்ட முன்னேற்றத்தையும் அறிவு சார்ந்த லாபத்தையும் தரும். நினைத்ததை சாதிக்கும் தைரியம் கிடைக்கும். குடும்பத்துணைவரின் மூலம் கூடுதல் வருமானம் ஆதரவு உண்டு. களத்திரகாரகன் செவ்வாய் லாபஸ்தானத்துக்கு வருவது சிறப்பு. ராசிநாதன் சுக்கிரன் 12ல் இருந்தாலும் நற்பலன்களைத் தருவார் என்று எதிர்பார்க்கலாம். தனஸ்தானத்தில் உள்ள குரு தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் நல்லபடியாக நடக்கும்.

கவனம் தேவை: ஐந்தாம் இடத்தில் கேது இருப்பதால் குழந்தைகள் தொடர்பான கவலைகள் அல்லது மனவருத்தங்கள் ஏற்படலாம். பன்னிரண்டாம் இடத்தில் சூரியன், சுக்கிரன் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும் மற்றும் குழப்பம் தோன்றும். லாபஸ்தானத்தில் சனி, செவ்வாய் இணைந்து சஞ்சரிப்பது நல்லதல்ல. திட்டமிட்டுக் காரியங்களைச் செய்யாவிட்டால் சிரமங்கள் ஏற்படும். பணத்தையும் பொருளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சந்திராஷ்டமம்: 8.4.2026 காலை 5.54 முதல் 10.4.2026 மாலை 6.04 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்குங்கள் மங்கலங்கள் பெருகும்.

 

 

 

Tags :
× RELATED மீனம்