×

மேஷம்

9.4.2026 முதல் 15.4.2026 வரை

சாதகங்கள்: மேஷத்தில் சுக்கிரன் இருப்பதால் கவர்ச்சி, கலை உணர்வு மற்றும் உற்சாகமான தன்மை கிடைக்கிறது. மூன்றாம் இடத்தில் குரு இருப்பது தைரியம், நல்ல பேச்சுத்திறன் மற்றும் முயற்சியில் வெற்றியை அளிக்கிறது. லாபஸ்தானத்தில் ராகு இருப்பதால், எதிர்பாராத வருமான வாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் பெரிய சிரமம் இருப்பதற்கு வழியில்லை காரணம், ராசியில் தன, குடும்ப காரகனான சுக்கிரன் பிரவேசித்து ஏழாம் இடமான தன்னுடைய ராசியைப் பார்ப்பது சிறப்பு. லாபஸ்தானத்தினை குரு பார்ப்பதால் தொழில் லாபம், வியாபார லாபம் நன்றாகவே இருக்கும். மனைவி மூலம் வருமானம் கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்கும் வழி பிறக்கும்.

கவனம் தேவை: பன்னிரண்டாம் இடத்தில் சூரியன், சனி, புதன் ஆகியவை சேர்ந்து இருப்பது அதிக செலவு, மனஅழுத்தம் மற்றும் சில சமயங்களில் தனிமை உணர்வை உருவாக்கும். குருவின் 3ம் இட ஸ்தான பலன் அதிக செலவைத் தரும். அதோடு ராசிக்கு விரயத்தில் ராசி அதிபதி வருவதும் கவனமாக இருக்க வேண்டியதைச் சுட்டிக்காட்டுகின்றது. வீண் செலவுகளும் அலைச்சலும் தேவையில்லாத பிரயாணங்களும் ஏற்படும்.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் சுப பலன்கள் நடக்கும்.

 

 

 

 

 

Tags :
× RELATED மீனம்