கிருஷ்ணாவின் 25வது படம் மர்டர் இன் டவுன்

 

சென்னை: வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் கிருஷ்ணா குலசேகரன், தனது 25வது படமாக, ‘மர்டர் இன் டவுன்’ என்ற கிரைம் திரில்லர் படத்தில் நடித்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மனு மந்த்ரா கிரியேஷன்ஸ், ஸ்ரீவிஷ்ணு கிரியேஷன்ஸ், யாத்ரா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். நடுத்தர வயது கொண்ட காவல்துறை அதிகாரி வேடத்தில் கிருஷ்ணா குலசேகரன் நடித்துள்ளார். முக்கிய கேரக்டர்களில் பிந்து மாதவி, பால சரவணன், வைபவ் முருகேசன், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், சரவணன், ஐ.எம்.விஜயன், கிரிஷ் தயாள், கஜராஜ், தர்ஷிகா, பேபி நைனிகா நடித்துள்ளனர்.  மகேந்திர ராஜ் சந்தோஷ் குமார், கருணாநிதி வேலப்பன், சுபா வெங்கட் இணைந்து தயாரித்துள்ளனர். டி.கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சன் இசை அமைத்துள்ளார்.

 

Related Stories: