ரகுலுக்கு காயம் கற்றுக்கொடுத்த பாடம்

தென்னிந்திய படவுலகை தொடர்ந்து இந்தியிலும் திரைப்படங்கள், விளம்பரங்கள், வெப்தொடர்கள், இசை ஆல்பங்களில் நடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பவர், ரகுல் பிரீத் சிங். அவர் தனது சோஷியல் மீடியாக்களின் விளம்பரங்களின் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். மேலும், உடற்​ப​யிற்​சிக்கு அதிக முக்கியத்​து​வம் கொடுக்கிறார். கடந்த 2024ம் ஆண்டு இறு​தியில் ஜிம்​மில் 80 கிலோ எடையை தூக்​கும்போது முதுகில் பலத்த காயம் அடைந்தார். இதற்​காக தீவிர சிகிச்​சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், 18 மாதங்​களுக்​கு பிறகு மீண்டும் உடற்​ப​யிற்​சி​யை தொடங்​கி​யுள்​ளார். இதுகுறித்து கூறுகையில், ‘ஒவ்​வொரு பயணத்​தி​லும் யாரும் எதிர்​பார்க்​காத ஒரு அத்​தி​யா​யம் இருக்​கும். எனக்கு அது ஒரு காயத்​தின் வடி​வில் வந்தது.

ஒவ்​வொரு நாளும் இன்னும் வலிமையாக மாற வேண்​டும் என்ற இலக்​குடன் இருந்தபோது, அந்​த காயம் எனது பயணத்​தை திடீரென்று தடுத்து நிறுத்​தி​விட்​டது. அது எனக்கு ஏராளமான பாடங்​களை கற்​றுக்கொடுத்​தது. குறிப்பாக, பொறுமை​யையே அதிகமாக கற்​றுக்கொடுத்​தது. முன்பு புதிய உடற்​ப​யிற்சி இலக்​கு​களை அடைய வேண்​டும் என்​ப​தில்​ எனது கவனம் இருந்​தது. ஆனால், இந்​த காயத்துக்​கு பிறகு நல்ல உடல்​நிலையை மீண்​டும் பெறு​வது​தான் முக்​கி​யம் என்​பதை உணர்ந்தேன். ஜிம்​முக்​குள் மீண்​டும் நுழைந்​தது, நீண்ட நாட்​களுக்​கு பிறகு எனது வீட்டுக்​கு திரும்​பியதை போன்ற உணர்வை கொடுத்​தது. நான் பழைய மனுஷியாக திரும்பி வரவில்​லை. மனவலிமை, நன்றியுணர்வு மற்றும் புதிய பார்​வை​யுடன் புதிய அத்​தி​யா​யத்​தை தொடங்க வந்​திருக்​கிறேன்’ என்றார்.

Related Stories: