சாய்பாபா பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம், ‘இருள் சூழும் இரவினிலே’. பக்கா கமர்ஷியல் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இதை சிவராம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். அவர் கூறுகையில், ‘பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திகில், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை, மிகவும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் படம் உருவாகியுள்ளது. சிறந்த திரைக்கதையால் வெற்றிபெற்ற படங்களின் வரிசையில் இப்படம் இடம்பெறும். யூடியூப்பில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விரைவில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. வயலன்ட் வேலு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இது அவரது 100வது படமாகும். விஷ்ணுவர்தன் இசை அமைக்க, அருண் சுஷில் ஒளிப்பதிவு செய்துள்ளார். பழநியை சேர்ந்த எம்.பாலா தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் படம் திரைக்கு வரும்’ என்றார்.
