வடநாட்டு உண்மை சம்பவம் படமானது

கே ஸ்கொயர் சினிமாஸ் சார்பில் கே.பிந்து மாதவி, பி.ராஜேஷ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘நிறம்’. இதை பலராம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். இவர், இயக்குனர் மோகன் ராஜா, மானு நடித்த ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற படத்தின் இயக்குனர் குரு ரமேஷிடம் பணியாற்றியவர். முகேன் ராவ், பிரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, திருநாவுக்கரசு நடித்துள்ளனர். இமான் இசை அமைக்க, சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சி அமைக்க, விஜே சாபு ஜோசப் எடிட்டிங் செய்துள்ளார்.

தாமோதரன் அரங்கம் அமைத்துள்ளார். பா.விஜய், விவேகா பாடல்கள் எழுதியுள்ளனர். சங்கர், சாய் பாரதி நடனப் பயிற்சி அளித்துள்ளனர். படம் குறித்து பலராம் கிருஷ்ணா கூறுகையில், ‘வடநாட்டில் நடந்த பரபரப்பான ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, ஹைப்பர் லிங்க் ஆந்தாலஜி படத்ைத எழுதி இயக்கியுள்ளேன். 6 பேரை மையப்படுத்திய இதில் நடக்கும் சம்பவங்கள், பிறகு ஒன்றுடன் ஒன்று இணையும். மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. மருத்துவத்துறையில் நடந்து வரும் மிகப்பெரிய குற்றத்தை பற்றி சொல்வதால், அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும்’ என்றார்.

Related Stories: