செப்டம்பர் 4ம் தேதி ‘மண்டாடி’ ரிலீஸ்

தமிழ் மற்றும் தெலுங்கில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் நடித்துள்ள படம், `மண்டாடி’. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கிறது.

கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் அவர்களின் மன உறுதியை மையமாக கொண்ட சக்தி வாய்ந்த ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக படம் உருவாகியுள்ளது. கடலின் பிரமாண்டமான பின்னணியில், பரபரப்பான படகு பந்தயத்தை படம் மையப்படுத்துகிறது. இந்நிலையில், வரும் செப்டம்பர் 4ம் தேதி படம் உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: