மும்பை: கங்குவா படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தவர் திஷா பதானி. பாலிவுட் நடிகையான இவர், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஆபாச கோணத்தில் ‘போஸ்’களை தருவார். அதற்கேற்ப கவர்ச்சியில் எல்லை மீறும் ஆடைகளை அணிவார். இந்நிலையில் அக்ஷய் குமார் ஜோடியாக ‘வெல்கம் டு ஜங்கிள்’ என்ற இந்தி படத்தில் திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்தின் புரமோஷன் விழாவுக்கு பச்சை நிறத்தில் படு கவர்ச்சியான ஆடை அணிந்து திஷா பதானி வந்திருந்தார்.
இதே படத்தில் நடிக்கும் நடிகர்கள் அர்ஷத் வர்ஸி, காமெடி நடிகர் ராஜ்பால் யாதவ் ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தனர். மேடையில் திஷா பதானிக்கு பக்கத்தில் அமர்ந்த அர்ஷத் வர்ஸி, அடிக்கடி திஷா பதானியின் தோளுடன் தனது தோளை ஒட்டியபடியும் அவரை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தபடியும் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் திஷா பதானியின் கையை பிடித்து அழுத்தி இருக்கிறார். இதைப் பார்த்து திஷா பதானி அதிர்ந்தார்.
உடனே, ‘நீங்கள் ஜிம் போகிறீர்களா’ என பார்த்தேன் என்று சமாளித்துள்ளார். விழாவில் மேடையில் ஒரு ஓரத்தில் இருந்த ராஜ்பால் யாதவ், பேச வரும்போது, ‘நான் திஷாவின் அருகில் அமர்ந்து பேச விரும்புகிறேன்’ என்றார். இதைக் கேட்டு மேடையில் இருந்தவர்கள் சிரித்தது, பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.
அக்ஷய் குமார் அவரை அழைத்து வந்து, திஷா பதானியின் பக்கத்தில் அமர வைத்தார். அப்போது திஷாவின் தோளில் கை போட்டபடி ராஜ்பால் யாதவ் பேசினார். இதனால் திஷா பதானி கடும் தர்ம சங்கடத்துக்கு ஆளானார். இச்சம்பவத்தால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது. திஷா பதானியிடம் இதுபோல் நடிகர்கள் அத்துமீறி நடந்தது கேவலமானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
