திடீரென்று சுவாசிகா காலில் விழுந்த மிஷ்கின்

சசி எழுதி இயக்கியுள்ள ‘நூறு சாமி’ என்ற படம், வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி, சுவாசிகா மற்றும் படக்குழுவினருடன் முன்னணி இயக்குனர்கள் கலந்துகொண்டனர். விஜய் ஆண்டனி இசை அமைத்த ‘டிஷ்யூம்’ என்ற படத்தை இயக்கியவர், சசி. பிறகு சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்தார். மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘நூறு சாமி’ என்ற படத்தில், கணவனை இழந்த பெண் மறுமணம் செய்வது தொடர்பான உணர்வுப்பூர்வமான கதை இடம்பெற்றுள்ளது.

இப்படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த மிஷ்கின், படம் குறித்து மேடையில் பேசும்போது, ‘நான் மிகவும் உணர்ச்சிவசப்படுபவன். சுவாசிகாவின் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன். அவர் இந்த மேடையில் இருந்தால், கண்டிப்பாக அவரது காலில் விழுந்து வணங்கியிருப்பேன்’ என்றார். இவ்வாறு பேசிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிய மிஷ்கின், அங்கு 4வது வரிசையில் அமர்ந்திருந்த விஜய் ஆண்டனியை பாராட்டினார். பிறகு சுவாசிகாவின் காலில் திடீரென்று விழுந்து வணங்கினார். இதனால் பதறிய சுவாசிகா, மிஷ்கின் கைகளை பிடித்து நன்றி சொன்னார். அப்போது அவர் கண்கலங்கிய காட்சி ரசிகர்களை நெகிழ வைத்தது.

 

Related Stories: