
கங்கனா ரனவத் நடித்துள்ள இந்தி படம், ‘பாரத் பாக்ய விதாதா’. இந்த வார்த்தைகள் இந்திய தேசிய கீதத்தில் இடம்பெற்றவை என்றாலும், இது தனக்கு டைட்டிலாக கிடைக்க காரணம் ஜான் ஆபிரஹாம் என்று கங்கனா ரனவத் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், ‘இப்படத்துக்கு முதலில் ‘நர்ஸ் ஆஃப் காமா’ என்று பெயரிடப்பட்டது. ஆனால், முழு கதையையும் கேட்டபோது, இந்த டைட்டில் படத்துக்கு பொருந்தி வரவில்லை என்பதை உணர்ந்தோம்.
குறிப்பாக, இப்படம் நமது இந்தியாவின் ஆன்மாவையும், சாமானியர்களின் துணிச்சலையும் பிரதிபலிப்பதால், இதற்கு ‘பாரத் பாக்ய விதாதா’ என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம். ஆனால், இந்த தலைப்பு ஏற்கனவே நடிகர் ஜான் ஆபிரஹாம் பெயரில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே அவரை தொடர்புகொண்டு கேட்டபோது, எந்த தயக்கமும் இல்லாமல், எந்த கட்டணமும் பெறாமல், ஒரேநாளில் தலைப்பை எங்களுக்காக கொடுத்தார். அவருக்கு எனது நன்றி’ என்றார்.

