×

ஆக்‌ஷன் திரில்லரில் லிஜோமோல் ஜோஸ்

ஹைப்பர்-லிங்க் ஆக்‌ஷன் திரில்லர் படம், ‘தி ஒன்: வித்தின் யூ’. கோபால் பாலகிருஷ்ணன், சிவா ராமநாதன் இணைந்து தயாரித்துள்ளனர். ஆதிரன் ராக்கப்பன் இயக்கியுள்ளார். தொடர்பில்லாத மனிதர்களின் வாழ்க்கை, விதி, சூழ்நிலைகள், உயிர் பிழைப்பதற்கான போராட்டம் ஆகியவற்றை பற்றி படம் சுவாரஸ்யமாக ஆராய்கிறது. கோவை மேற்குத்தொடர்ச்சி மலை பின்னணியில் கதை நகர்கிறது. சிவராத்திரி அன்று மாறுபட்ட வாழ்க்கை பின்னணியை கொண்ட நான்கு மனிதர்கள், எதிர்பாராத சம்பவங்களின் தொடர்ச்சியால் எவ்வாறு அசாதாரணமான சம்பவத்தில் சிக்குகின்றனர் என்பதை படம் பேசுகிறது.

லிஜோமோல் ஜோஸ், ‘பருத்திவீரன்’ சரவணன், பாவெல் நவகீதன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, கீதா கைலாசம், பிரவீன் ராஜா, ராஜீவ் ஆனந்த், கணேசன் கலியமூர்த்தி, ஜே.எஸ்.கவி, தர், ஆதிரா, பொற்கொடி, அனுபமா உன்னி, ஹீனா ரத்தோர், ஸ்மிருதி நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசை அமைக்க, வினோத் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். காந்த் கோபால் அரங்குகள் அமைக்க, சி.எஸ்.பிரேம் குமார் எடிட்டிங் செய்துள்ளார். ஒவ்வொரு மனிதருக்கும் தனது விதியை மாற்றும் சக்தி இருக்கிறது என்ற கருத்தை படம் வலியுறுத்துகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது.

Tags : Lijomol Jose ,Gopal Balakrishnan ,Siva Ramanathan ,Adhiran Rakkappan ,Western Ghats of Coimbatore ,Shivaratri ,Lijomol ,
× RELATED காதல் திருமணத்தை அறிவித்த ஐஸ்வர்யா