×

ஆமிர் கான் 3வது காதல் திருமணம்

பாலிவுட் முன்னணி நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆமிர் கான், கடந்த 1986ல் ரீனா தத்தை காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு மகன் ஜுனைத் கான், மகள் இரா கான் இருக்கின்றனர். இதில் ஜூனைத் கான் இந்தி படங்களில் நடிக்கிறார். இரா கான் மனநலம் குறித்த விழிப்புணர்வின் ஆதரவாளராக இருக்கிறார். 2002ல் கருத்து வேறுபாடு காரணமாக ஆமிர் கான், ரீனா தத் விவாகரத்து மூலம் பிரிந்தனர். 2005ல் இந்தி ‘லஹான்’ படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் கிரண் ராவை காதல் திருமணம் செய்த ஆமிர் கான், வாடகை தாய் மூலம் ஆஸாத் என்ற மகனுக்கு தந்தையானார். 2021ல் ஆமிர் கான், கிரண் ராவ் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஆனால், 2024ல் ஹிட்டான ‘லாபட்டா லேடீஸ்’ என்ற இந்தி படத்தில் அவர்கள் தயாரிப்பாளர்களாக பணியாற்றினர். இதை கிரண் ராவ் இயக்கினார். இந்நிலையில், அழகு துறை சார்ந்த தொழில்முனைவோர் மற்றும் நீண்ட கால தோழியான கவுரி ஸ்பிராட்டை காதலித்த ஆமிர் கான், அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியதாக சொன்னார். இந்நிலையில் ஆமிர் கான், கவுரி ஸ்பிராட் திருமணம் வரும் ஜூலை 5ம் தேதி நடப்பதாக தகவல் பரவி வருகிறது. கவுரி ஸ்பிராட்டுக்கு அவரது முதல் திருமணத்தின் மூலம் 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

Tags : Aamir Khan ,Bollywood ,Reena Dutt ,Junaid Khan ,Ira Khan ,Kiran Rao ,
× RELATED ஆக்‌ஷன் திரில்லரில் லிஜோமோல் ஜோஸ்