சென்னை: சசிகுமாருடன் ‘மை லார்ட்’ படத்தில் நடித்த சைத்ரா ஆச்சர், அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக சேலை அணிந்து நடித்தார். பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஹோம்லி டிரெஸ்ஸில் வந்தால் தொடர்ந்து இதே போன்று டிரடிஷன் டிரெஸ் கொடுத்தே படங்களில் நடிக்க வைத்து விடுவார்கள் என நினைத்து அந்த படத்தின் பட விழாவிலேயே பாவாடை ஸ்டைல் கிளாமர் டிரெஸ் போட்டு வந்தார். அதே போல தற்போது நடிகை பூஜா ஹெக்டேவும் இந்தி பட புரமோஷனுக்கு வந்திருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடிகைகள் மத்தியில் இதுபோன்ற பாவாடை ஸ்டைல் கவர்ச்சி உடைக்கு இப்போது மவுசு ஏற்பட்டுள்ளது. நடிகைகள் பலரும் இதுபோன்ற உடைகளையே இப்போது அதிகம் டிமாண்ட் செய்கிறார்கள். அதிலும் பூஜா ஹெக்டே, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது கிளாமரில் அதிக கவனம் செலுத்துகிறார். ‘ஹே ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹே’ இந்தி படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷனில்தான் இவர் பாவாடை பாணி உடையில் வந்தார். இதே படத்தில் லிப்லாக் காட்சி, பிகினி காட்சிகளிலும் பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.
