25 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா, வடிவேலு இணைந்து நடிக்கும் படம், ‘பேங் பேங்’. இதை சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். கேர்ஆர்ஜி கண்ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரிக்கின்றனர். முக்கிய வேடம் ஒன்றில் பப்லு பிருத்விராஜ் நடிக்கிறார்.
ஹெச்.சி.வேணு ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மாறுபட்ட ஜோம்பி வகை ஜானரில் உருவாகும் இப்படம், ஆக்ஷன் மற்றும் காமெடி, ஹாரர் அம்சங்கள் கலந்த கமர்ஷியல் படமாக தயாராகிறது. முன்னதாக வெளியான டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் ஜோம்பிகளால் சூழப்பட்ட நிலையில் பிரபுதேவா, வடிவேலு ஆகியோர் துப்பாக்கியுடன் தோன்றிய காட்சிகள் வைரலானது. ‘பிரபு வேலு’, ‘வடி தேவா’ போன்ற பெயர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்தது. இந்தோனேசியா மவுண்ட் புரமோ எரிமலை பகுதியில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
