×

ஐஸ்வர்யா கேரக்டரில் வித்யா பாலன்

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலில் சாதனை படைத்த படம், ‘சங்கராந்திகி வஸ்துனாம்’. அனில் ரவிபுடி இயக்கத்தில் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக உருவான இதில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக வெங்கடேஷ் நடித்தார். அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னாள் காதலியாக மீனாட்சி சவுத்ரி நடித்தனர். தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

அனீஸ் பாஸ்மி இயக்குகிறார். தெலுங்கில் தயாரித்த தில் ராஜுவே இந்தி ரீமேக்கையும் தயாரிக்கிறார். தெலுங்கில் வெங்கடேஷ் நடித்திருந்த கேரக்டரில் அக்‌ஷய் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த கதாபாத்திரத்தில் வித்யா பாலன், மீனாட்சி சவுத்ரி நடித்த கேரக்டரில் ராசி கன்னா ஒப்பந்தமாகியுள்ளனர். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தி ரீமேக் வரும் டிசம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது.

Tags : Vidya Balan ,Aishwarya ,Anil Ravipudi ,Venkatesh ,Aishwarya Rajesh ,Meenakshi Chaudhary ,Anees Bazmee ,Dil Raju ,Akshay Kumar ,
× RELATED பிரச்னை வந்தால்தான் கடவுளை நினைப்பேன்: சூர்யா