×

6 பாகங்களாக நீளும் ‘டிமான்ட்டி காலனி’

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து கடந்த 2015, 2024ம் ஆண்டுகளில் 2 பாகங்களாக வெளியான ‘டிமான்ட்டி காலனி’ என்ற படம் அமோக வரவேற்பு பெற்றது. தற்போது 3ம் பாகம் உருவாகியுள்ளது. ‘டிமான்ட்டி காலனி 3: தி எண்ட் இஸ் டூ ஃபார்’ என்ற பெயரில் தயாராகியுள்ள இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லடாக், போர்ச்சுகல், மால்டா ஆகிய பகுதிகளில் நடந்த படப்பிடிப்பு முடிந்தது. வரும் ஜூன் 24ம் தேதி படம் திரைக்கு வருகிறது. அஜய் ஞானமுத்து கூறுகையில், ‘முன்பு ‘டிமான்ட்டி காலனி 2’ வரும்போது, முதல் பாகம் மிகவும் நன்றாக இருந்ததாக சொன்னார்கள். 2ம் பாகத்தை இயக்கியபோது லாஜிக்கை சொல்லி, அதை கதையுடன் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம் என்று நினைத்தேன். 3ம் பாகத்தில் அது எப்படி என்று சொல்லியிருக்கிறோம். இதன் பின்னணியில் சாபம் இருப்பதையும் மற்றும் அது என்ன சாபம், அதற்கான ஆரம்பம் என்ன என்பதையும் சொல்லியிருக்கிறோம். ‘டிமான்ட்டி காலனி’யின் கதை 6 பாகங்கள் வரை நீடிக்கும். அதற்கான கதைகள் தயாராக இருக்கிறது’ என்றார்.

Tags : Ajay Gnanamuthu ,Arulnithi ,Priya Bhavani Shankar ,Guru Somasundaram ,Meenakshi Govindarajan ,Archana Ravichandran ,Sam CS ,Sivakumar Vijayan ,Ladakh ,
× RELATED பிரச்னை வந்தால்தான் கடவுளை நினைப்பேன்: சூர்யா