×

சவால்கள் சந்திக்கும் மருமகள் சமந்தா

திருமணத்துக்கு பிறகு சமந்தா தெலுங்கில் தயாரித்து நடித்துள்ள படம், ‘மா இன்டி பங்காரம்’. இதில் ‘ஓ பேபி’ என்ற படத்துக்கு பிறகு மீண்டும் சமந்தாவுடன் இணைந்துள்ளார், இயக்குனர் பி.வி.நந்தினி ரெட்டி. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். குல்ஷன் தேவய்யா, கவுதமி, முகி உள்பட பலர் நடித்துள்ளனர். கடந்த 1980களில் நடப்பது போன்ற குடும்ப பின்னணி கொண்ட அதிரடி படமாக உருவாகியுள்ளது.

மிகவும் அமைதியான ஒரு மருமகளாகவும், அதேவேளையில் சவால்களை எதிர்கொள்ளும் அதிரடி பெண்ணாகவும் சமந்தா நடித்துள்ளார். இப்படம் முதலில் இன்று (15ம் தேதி) திரைக்கு வரும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது வரும் ஜூன் 19ம் தேதியன்று திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Tags : Samantha ,PV Nandini Reddy ,Santhosh Narayanan ,Gulshan Devaiah ,Gauthami ,Mukhi ,
× RELATED பிரச்னை வந்தால்தான் கடவுளை நினைப்பேன்: சூர்யா