×

கணவரை பிரிகிறார் மவுனி ராய்

மும்பை: நாகினி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மவுனி ராய். இவர் கடந்த 2022ல் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சூரஜ் கேரளாவை சேர்ந்த மலையாளி. மவுனி ராய், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இதனால் திருமணம் பெங்காலி மற்றும் மலையாளி ஆகிய இரண்டு முறைப்படியும் நடந்தது.

திருமணம் முடிந்து தற்போது நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி இணையத்தில் பரவி வருகிறது. மவுனி ராய் தனது கணவர் சூரஜ் நம்பியாரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டார் என்பதுதான் அது. சூரஜ் நம்பியாரும் மவுனி ராயை பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா என இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் இருவரும் இதுவரை இது பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால் விரைவில் இது குறித்து மவுனி ராய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தமிழில் ‘கேஜிஎப்-சாப்டர் 1’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார்.

Tags : Mouni Roy ,Mumbai ,Dubai ,Suraj Nambiar ,Suraj ,Kerala ,West Bengal ,
× RELATED வாரிசுகளால் நடிகை கிரித்தி சனோன்க்கு ஏற்பட்ட இழப்பு