×

நான் திட்டினால் பிரசாந்த் பாண்டியராஜுக்கு ரொம்ப பிடிக்கும்: இயக்குனர் பாண்டிராஜ் கல கல

சென்னை: ஜீ5 வழங்கும் தமிழ் கிரைம் திரில்லர் வெப்தொடர், ‘வாரண்ட்’. இதை ‘புரூஸ் லீ’, ‘மாமன்’ ஆகிய திரைப்படங்களையும், ‘விலங்கு’ என்ற வெப்தொடரையும் எழுதி இயக்கியிருந்த பிரசாந்த் பாண்டியராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். சிவன் பிக்சர்ஸ், எஸ் ஸ்டுடியோஸ் சார்பில் பிரசாந்த் பாண்டியராஜ், பி.விஷால், பி.எம்.ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர். பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். வரும் 22ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகும் இத்தொடருக்கான அறிமுக விழா சென்னையில் நடந்தது.

அப்போது இயக்குனர் பாண்டிராஜ் பேசுகையில், ‘பிரசாந்த் பாண்டியராஜை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். ‘மாமன்’ படத்துக்கு பிறகு வெப்சீரிஸ் இயக்குவதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என்று வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்‌ஷன் கதை வைத்திருந்தேன். அந்த கதையில் நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம்’ என்றார்.

விழாவில் கவின், போஸ் வெங்கட், வையாபுரி, அருள்தாஸ், சுசீந்திரன், ராம்குமார் பாலகிருஷ்ணன், தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர்கள் மதன், கே.எஸ்.சினிஷ், குமார், நடிகைகள் கவுசல்யா, மீனா, அருள்ஜோதி, சாயாதேவி, பூர்ணிமா ரவி கலந்துகொண்டனர்.

Tags : Prashant Pandiraj ,Pandraj Kala Kala Chennai ,G5 ,P. Vishal ,P. M. ,Aadishwar ,Vignesh Natarajan ,Chennai ,
× RELATED தோல்வியை சந்தித்தால் 1 மணி நேரம் அழுவேன்: ஸ்ரீலீலா சொல்கிறார்