சென்னை: இந்தியில் ஏற்கனவே வெளியாகியுள்ள ‘ராகினி எம்எம்எஸ்’ படத்தின் மூன்றாவது பாகத்தை தற்போது இயக்குகிறார் ஏக்தா கபூர். சல்மான்கானின் மைத்துனர் ஆயுஷ் ஷர்மா, அமீர்கானின் மகன் ஜூனைத்கான் ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்தில் தமன்னா நாயகியாக கமிட்டாகி உள்ளார்.
அமானுஷ்யம் கலந்த திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் தமன்னா, அமானுஷ்ய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தன்னை மையப்படுத்திய கதை என்பதால் இந்த படத்திற்கு வழக்கத்தை விட கூடுதலான நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்திருக்கிறார் தமன்னா. இந்த படத்தின் முதல் இரு பாகங்களிலும் பாலியல் காட்சிகள் தாரளமாக இடம்பெற்றன. குறிப்பாக இப்படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் பெட்ரூம் காட்சிகளில் நடிப்பதுபோன்ற விரசமான காட்சிகள் இடம்பெறும். முதல் பாகத்தில் நாயகியாக நடித்த புதுமுகம் ஷம்ரிதாவும் இரண்டாம் பாகத்தில் நாயகியாக நடித்த சன்னி லியோனும் அதுபோல் நடித்திருந்தனர். அதே பாணியில், இந்த படத்தில் தமன்னாவுக்கும் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் இருக்கும் என்றும் பெட்ரூம் காட்சிகள் இடம்பெறும் என்றும் சொல்லப்படுகிறது. இதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இப்படம் தவிர தமிழில் சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்தில் நடித்துவரும் தமன்னா, இந்தியில் தயாராகி வரும் சாந்தாராம் பயோபிக் படத்திலும் ஜெய்ஸ்ரீ சாந்தாராம் வேடத்தில் நடித்து வருகிறார்.
