×

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் திஷா பதானி

இந்தியில் ‘லோஃபர்’, ‘எம்.எஸ்.தோனி’ ஆகிய படங்களின் மூலம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், திஷா பதானி. கடைசியாக ஷாகித் கபூர் ஜோடியாக ‘ஓ ரோமியோ’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்த அவர், தமிழில் சூர்யா ஜோடியாக ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘ஹோலிகார்ட்ஸ் சகா: தி போர்ட்டல் ஆஃப் போர்ஸ்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் அவர் ஜெசிகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கெவின் ஸ்பேசி இயக்கும் இதில் டைரிஸ் கிப்சன், டால்ப் லண்ட்கிரென் உள்பட பலர் நடிக்கின்றனர். ‘ஆல்பினோ அலிகேட்டர்’, ‘பியாண்ட் தி சீ’ ஆகிய படங்களை இயக்கிய கெவின் ஸ்பேசி, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தவிர, பாலிவுட்டில் நிதின் கக்கர் இயக்கத்தில் இம்ரான் ஹாஷ்மி ஜோடியாக ‘அவரபன் 2’ என்ற படத்தில் நடிக்கிறார். இது வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

Tags : Disha Patani ,Hollywood ,Shahid Kapoor ,Suriya ,Jessica ,Kevin Spacey ,Tyrese Gibson ,Dolph ,
× RELATED வாரிசுகளால் நடிகை கிரித்தி சனோன்க்கு ஏற்பட்ட இழப்பு