×

அபிஷன் ஜீவிந்துக்கு டபுள் ஹீரோயின்கள்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், ‘வித் லவ்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பிறகு அவர் அடுத்த படத்தை இயக்குவாரா அல்லது ஹீரோவாக நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அபிஷன் ஜீவிந்த் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படத்தை புதியவர் ஒருவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இப்படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு தந்தையாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது இப்படத்தில் 2 ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, தெலுங்கில் வெளியான ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற படத்தில் நடித்திருந்த ஷிவானி ஒரு ஹீரோயினாகவும், அபிஷன் ஜீவிந்த் இயக்கிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தில் பிரபலமான யோகலட்சுமி மறு ஹீரோயினாகவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Abhishan Jeevindh ,Sivarajkumar ,
× RELATED வாரிசுகளால் நடிகை கிரித்தி சனோன்க்கு ஏற்பட்ட இழப்பு