- வேடன்
- அறிவு
- அசல் கோலார்
- சென்னை
- கேப்ரி
- குச்சி
- சந்தன் ஷெட்டி
- டகால்டி
- வணக்கம் வணக்கம் பெங்களூர்
- ஆல்ட்+
- உயர் கலாச்சாரம்
- வணக்கம் வணக்கம்
சென்னை: தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகை இணைக்கும் ‘வணக்கம் வணக்கம் பெங்களூர்’ என்ற விழாவில் வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி, டகால்டி ஆகியோரின் நிகழ்ச்சிகளுடன், தமிழ் கலைஞர்கள் அறிவு, அசல் கோலார் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. Alt+ மற்றும் தி ஹை கல்ச்சர் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி, தென்னிந்திய இன்டிபெண்டென்ட் ஹிப்-ஹாப் இயக்கத்தின் வளர்ச்சியில் முக்கிய கட்டமாக அமைந்தது. மேடை நிகழ்ச்சிகளில் வேடன் பயன்படுத்திய ‘வணக்கம் வணக்கம்’ என்ற வரியை மையப்படுத்திய இந்த டூர் ஐபி, தற்போது இளைஞர்களிடம் வலுவான கலாச்சார அடையாளமாக உருவெடுத்து வருகிறது. பெங்களூருவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்த இசைப்பயணத்தின் அடுத்த பதிப்பு ‘வணக்கம் வணக்கம் சென்னை’ என்ற பெயரில் சென்னையில் விரைவில் நடக்கிறது. வேடன், அறிவு, அசல் கோலார் இதிலும் கலக்க உள்ளனர். பிறகு ஐதராபாத், மும்பை ஆகிய பெருநகரங்களிலும், அதற்கு பிறகு பல்வேறு நாடுகளுக்கும் இந்த இசைப்பயணம் விரிவடைகிறது.
