சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மீண்டும் மறுசீரமைப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யபட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 முதல் 20 ஆம் தேதி வரை 9 விரைவு ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 முதல் 30 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை-தாம்பரம் செல்லும் 3 புறநகர் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 முதல் 30 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை-தாம்பரம் செல்லும் 5 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
