×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மழையால் நிரம்பியது; கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு: நாளை காலை ஒகேனக்கல்லை வந்து சேரும்

மேட்டூர்: கர்நாடகவின் கபினி அணையில் இருந்து நேற்றிரவு நீர்திறப்பு 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 15ஆயிரம் கனடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் நாளை அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலைக்​கா​விரி, பாகமண்​டலா, மடிகேரி உள்​ளிட்ட பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை கடந்த 2 மாதமாக வழக்கமானஅளவு பெய்​ய​வில்​லை. இதனால் காவிரி ஆற்​றின் குறுக்கே உள்ள கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய 4 அணை​களுக்கும் நீர்வரத்துஇன்றி நீர்மட்டம் குறைவாக இருந்தது.

இதனால், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி ஜூன், ஜூலை மாதங்​களில் தமிழகத்​துக்கு திறக்க வேண்​டிய நீரை கர்​நாடக அரசு திறக்​க​வில்​லை. தமிழக அரசு கடந்த 28ம் தேதி காவிரி ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டத்​தில் முறை​யிட்​டதை அடுத்​து, 15 நாட்​களுக்கு தமிழகத்​துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து​விட வேண்​டும் என ஒழுங்​காற்​றுக் குழு உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணை​யத்​தில் கர்​நாடக அரசு மேல்​முறையீடு செய்​தது. கர்​நாட​கா​வின் கோரிக்​கையை நிராகரித்த மேலாண்மை ஆணை​யம், தமிழகத்​துக்கு 15 நாட்​களுக்கு 3,500 கனஅடிநீரை திறந்​து​விடு​மாறு உத்​தர​விட்​டது. ஆனால் தண்ணீர் திறக்க கர்நாடக மறுப்பு தெரிவித்தது. காவிரி பங்​கீட்டு விவ​காரத்​தில் தமிழகம் – கர்​நாடகா இடையே மோதல் முற்​றிவந்த நிலையில், கடந்த 31ம் தேதி முதல் காவிரிநீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் கனமழை பெய்து வருகிறது. காவிரி உற்​பத்​தி​யாகும் தலைக்​கா​விரி​, கர்நாடக மாநிலம் வயநாட்டில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை கொட்​டியதால் ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

மைசூரு மாவட்​டம் எச்​.டி.கோட்​டை​யில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து வேகமாக நிரம்ப தொடங்கியது. கடல் மட்​டத்​தில் இருந்து 2,284 அடி உயரத்​தில் உள்ள க‌பினி அணை​யின் நீர்​மட்​டம் நேற்று பிற்​பகல் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை 15ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இரவில் 25ஆயிரம் கனஅடியாக மேலும் அதிகரிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு நீர்வரத்து 23,009 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 14958 கனஅடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 2281 அடியாக உள்ளது.

கபினி அணை​யில் இருந்துஉபரி நீர் திறக்​கப்​பட்​ட​தால் காவிரி ஆற்​றில் கடும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், கரையோர மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. 124.80 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 22,055கனஅடியாக உள்ளது. ஹேமாவதி அணை நிரம்பிய நிலையில் அணையில் இருந்து 11,884 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் கேஆர்எஸ் அணைக்கு தான் செல்லும். ஹாரங்கி அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

கபினியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் வழக்கமாக 24 மணி நேரத்திற்குள் தமிழக எல்லையாக பிலிகுண்டுலுவை வந்துசேரும். ஆனால் பலமாதங்களாக காவிரி ஆறு வறண்டு கிடப்பதால் மணல் பரப்பில் அதிகமாக நீர்உறிஞ்சி, குண்டுகுழிகளில் நிரம்பி வர தாமதமாகும். இதனால் நாளை காலையில் தான் ஒகேனக்கல்லை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kabini dam ,Okenakkal ,Mettur ,Karnataka ,Tamil Nadu border ,Biligundulu ,Karnataka… ,
× RELATED பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி