சென்னை: தாயுமானவர் திட்டம் பெயர் மாற்றத்திற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி; தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைந்தது முதல் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. விபத்து காரணமாக ஆட்சிக்கு வந்து விட்டார்கள் என்பதால், செய்வதறியாது திட்டங்களின் பெயர்களை மாற்றி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்திலும் அவர் பெயர் இருக்கிறது. திமுக ஆட்சியின் தாயுமானவர் திட்டத்தின் பெயரை தவெக அரசு நீக்கியது.
மூத்த குடிமக்கள் ரேஷன் கடைக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டுக்கே சென்று பொருள் வழங்கினோம். பொய் வழக்கு போடுவதில் தவெக அரசு கவனம் செலுத்தி வருகிறது. முதல்வரின் கர்நாடக பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. மின்கட்டணம் ஆயிரம் ரூபாய் வர வேண்டிய இடத்தில் ரூ.7000 பில் போடுகின்றனர். மக்கள் மீது கூடுதல் கட்டணத்தை சுமத்துவது ஒரு வகையான மோசடி என்றும் கூறினார்.
