திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம்

 

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, பக்தர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் ttddevasthanam.online என்ற போலி இணையதளத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை கண்டறிந்துள்ளது. இந்த இணையதளம் பக்தர்களை ஏமாற்றும் நோக்கத்தில் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போன்றே வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே இவற்றை பக்தர்கள் பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: