கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரபட்டியிலுள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி, பாஸ்கரன் மற்றும் கோதைநகர் பகுதியில் உள்ள கார்த்தி, ரமேஷ் ஆகியோரின் வீடுகள் உட்பட மொத்தம் 5 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
