சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: வேலூர் தெற்கு மாவட்டம், குடியாத்தம் நகரத்தைச் சேர்ந்த குடியாத்தம் குமரன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சி பணியாற்ற அனுமதிக்குமாறு திமுக தலைவரிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் திமுக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
