ஜனநாயகன் திரைப்படத்திற்காக அறிவிக்கப்படாத அரசு விடுமுறை: ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு

 

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் நேற்று வெளியானது. இதற்கு அறிவிக்கப்படாத அரசு விடுமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வார நாட்களில் தவறாமல் கோட்டைக்கு வரும் முதலமைச்சர் விஜய், நேற்று கோட்டைக்கு வரவில்லை. அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் மக்கள் பணியை தள்ளி வைத்துவிட்டு முதல்வர் ஜோசப் விஜய் நடித்து வெளிவந்த ஜனநாயகன் படம் ரிலீசுக்கு ரீல்ஸ் போட தியேட்டருக்கு போய் விட்டார்கள்.

அதுதான் தவெ‌க அரசின் தலையாய பணியாக நேற்று தமிழகம் கண்டு களித்தது. ஜனநாயகன் பார்க்கிறபோது அமைச்சர்களுக்கு வந்த கண்ணீர் இருக்கிறதே, அது குற்றால அருவியே அதில் போட்டி போட முடியவில்லை. ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, இந்த நாட்டிற்கு அறிவிக்கப்படாத அரசு விடுமுறையை அமல்படுத்திய வரலாறு. இந்த தமிழகம் பார்த்ததுண்டா இன்னும் அரசியல் ஆச்சரியம் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories: